Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

1 October 2018

TNPSC பொதுத்தமிழ் பகுதி - 9: பெயர்ச்சொல்லின் வகையறிதல்

TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 9

tnpsc group 2 tamil


விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் 

ஆறு வகைப்படும்.

1. பொருட்பெயர் – நாற்காலி, மேசை

2. இடப்பெயர் – அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து

3. சினைப்பெயர் - இலை, கண், காது

4. காலப்பெயர் – மார்கழி, மார்ச், காலை, மாலை

5. பண்புப்பெயர் - பச்சை, சிவப்பு

6. தொழிற்பெயர் - இகழ்தல், நடத்தல், ஓடுதல்


உதாரணம் – “மலர்“ என்பதன் பெயர்ச்சொல் வகை யாது?

அ. பண்புப்பெயர்

ஆ. இடப்பெயர்.

இ. காலப்பெயர்

ஈ. சினைப்பெயர்

விடை - ஈ. சினைப்பெயர்

குறிப்பு

பண்புப்பெயர் - பொதுவாக, “உ, கு, றி, அம், சி, பு, ஐ, மை, பம், நர் 

போன்ற விகுதிகளுடன் முடியும்.

தொழிற்பெயர் – தல், அல், அம், ஐ, கை, வை, பு, தி, சி, வி, உள், காடு, 

பாடு, அரவு, ஆணை, மை, து போன்ற விகுதிகளுடன் முடியும்.

Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *