TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 1
விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு
(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)
தொடரும் தொடர்பும் அறிதல் – இத்தொடரில் குறிப்பிடப்படும்
சான்றோர் அடைமொழி நூல் கண்டறிதல்
சான்றோர் அடைமொழி நூல் கண்டறிதல்
"அடைமொழி வச்சவன் யாரும் அழிஞ்சது இல்லடா"
இந்த வரிகளை தமிழ் திரைப்படட்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ்
மொழியிலும் புலவர்களுக்கும், அவர்கள் எழுதிய நூலகளுக்கும்
அடைமொழிகள் இருக்கின்றன. இந்த அடைமொழிகளையும் அது
தொடர்புடைய நூல்கள் அல்லது நூலாசிரியரை சரியாக
தேர்ந்தெடுப்பதே இந்த பகுதியின் உள்ளடக்கம்.
உதாரணமாக, சுரதாவை 'உவமைக்கவிஞர்' எனவும் திரு,வி.க
வை ''தமிழ்தென்றல்' எனவும் குறிப்பிடுவதை கூறலாம்.
அதுபோல் , திருக்குறளை ' உலகப்பொது மறை' என்றும் திருகயிலாய
ஞான உலா என்ற நூலை 'குட்டி திருவாசகம்' எனவும்
அடைமொழியால் குறிப்பிடுவதைக் கூறலாம்.
உதாரணம் - 1
பின்வருவனவற்றில் 'குட்டி திருக்குறள்' என அடைமொழியால்
குறிப்பிடப்படும் நூல் எது?
1. பழமொழி
2. ஏலாதி
3. நாலடியார்
4. புறநானூறு
விடை: 2. ஏலாதி
உதாரணம் - 2
'பன்மொழிப்புலவர்' என்ற அடைமொழியால் கூறப்படுபவர்?
1. இராஜாஜி
2. அறிஞர். அண்ணா
3. அழ.வள்ளியப்பா
4. கா.அப்பாத்துரை
விடை: 4. கா.அப்பாத்துரை
எப்படித் தயாராவது?
இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் தமிழ்நாடு
அரசு 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ் மொழி பாடப்
புத்தகத்தின் பகுதிகளிலிருந்து மட்டுமே கேட்கப்படுகின்றன.
எனவே, தமிழ் பாடத்தில் ஏதாவது புதிய வார்த்தைகளைக் கண்டால் விட்டு விடாதீர்கள், இப்பகுதியில் அவை வினாவாக இருக்கலாம்.
பொதுத்தமிழ் பாடதிட்டத்தில் காணப்படும் பகுதி ஆ மற்றும் பகுதி இ
ஆகிவற்றைப் படிக்கும் போது, இந்த பகுதியையும் சேர்த்து படித்து
விடலாம்.
0 comments:
Post a Comment