TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION - CHENNAI
குரூப்-1 தேர்வில் தமிழக அரசு கடந்த நாட்களில் பல்வேறு புதியமாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுஎழுதுவோருக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டு முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி எஸ்.சி.,எஸ்.டி.பிரிவினருக்கான வயது வரம்பு 35-ல் இருந்து 37 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது
குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கால தாமதம் ஆகுவதால்தேர்வர்கள் புகார் எழுப்ப தொடங்கினர். தேர்வு எழுதி 1 வருடத்திற்கும்மேல் காத்திருக்கும் சூழ்நிலை இருக்கிறது எனவும், இந்த நேரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் டிஎன்பிஎஸ்சி மீது புகார்எழுந்தது.
இந்நிலையில், குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதிமுடிவு வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார்சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும்,அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment