Model Question Papers, Job Recruitment Study Materials, Online Test

29 December 2018

ரிலையன்ஸ் ஜியோ ஹேப்பி நியூ இயர் 2019 கேஷ்பேக் ஆஃபர் வெளியானது



இந்தியாவின் டெலிகாம் சந்தையில் மிக வேகமான வளர்ச்சி பெற்று வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக் சலுகையை ஜியோ ஹேப்பி நியூ இயர் 2019 ஆஃபர் என்ற பெயரில் அறிவித்துள்ளது.




கடந்த வருடமும் ரிலையன்ஸ் ஜியோ 100 சதவீத கேஷ்பேக் சலுகையை அறிவித்திருந்த நிலையில் இந்த வருடம் 

அதே போன்ற சிறப்பு சலுகையின் வாயிலாக ரூ. 399 வரை கேஷ்பேக்கை வழங்குகின்றது. இதனை பெறுவது எவ்வாறு மற்றும் பயன்படுத்துவது தொடர்பான விபரத்தை அறிந்து கொள்ளலாம். கடந்த 2018 ஆம் வருடம் ரூ.50 முறையே கேஷ்பேக் சலுகையை மாதந்தோறும் வழங்கிய நிலையில் இந்த வருடம் முழுமையாக ஒரே முறையில் பயன்படுத்தலாம்.

1 . முதலில் ரூ.399 பிளானை ஜியோ எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் கேஷ்பேக் ஆஃபர் டிசம்பர் 28, 2018 முதல் ஜனவரி 31 , 2019 வரை மட்டுமே கிடைக்க உள்ளது.

2. மை ஜியோ ஆப் அல்லது ஜியோ அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் ரீசார்ஜ் செய்தால் இந்த கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும்.

3. ரூ.399 மதிப்புள்ள Ajio கேஷ்பேக் கூப்பனை பெறலாம். Ajio என்பது ரிலையன்ஸ் நிறுவனத்துடைய ஆன்லைன் விற்பனை பிரிவாகும்.


4. ரீசார்ஜ் செய்த உடன் ரூ.399 மதிப்பிலான கேஷ்பேக் கூப்பன் எஸ்எம்எஸ் வாயிலாக கிடைக்கும்.


அஜியோ கூப்பனை பயன்படுத்துவது எப்படி ?


1 . ajio.com அல்லது ajio ஆப் வாயிலாக ரூ.1000 அல்லது அதற்கு கூடுதலான விலையில் பொருட்களை தேர்ந்தெடுத்தால் ரூ. 400 கேஷ்பேக் கூப்பனை பயன்படுத்தலாம்.


2. இந்த சலுகையை பெற மார்ச் 15, 2019 வரை மட்டுமே கிடைக்கப் பெறும். ரீசார்ஜ் ஆஃபர் ஜனவரி 31 வரை மட்டுமே என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.


இந்த சிறப்பு நியூ இயர் 2019 ஆஃபர் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். கேஷ்பேக் ஆஃபரை பயன்படுத்த 1000 அல்லது அதற்கு கூடுதலான விலை உள்ள பொருட்களை ajio வாயிலாக வாங்க வேண்டும்.
Share:

0 comments:

Post a Comment

Online Tamil epapers

Online Tamil epapers
Tamil Online epapers collections

Labels

Blog Archive

Contact Form

Name

Email *

Message *